தீவிர சிகிச்சை பிரிவில் லதா மங்கேஷ்கர் அனுமதி: இசை ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய திரையுலகின் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி, தமிழ் உள்பட கிட்டதட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட வெளிநாட்டு மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் என்பதும் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

92 வயதாகும் லதா மங்கேஷ்கர் அவர்கள் தனது 13ஆம் வயதில் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் பாடியுள்ளார் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு கொரோனா வைரஸ்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லதா மங்கேஷ்கர் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாலத்தீவில் தலைவி சன்னிலியோன்…கிளாமர் புகைப்படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும்

டாக்டர் பட்டம் பெற்ற சிம்புவுடன் டி.ராஜேந்தர் - உஷா: புகைப்படங்கள் வைரல்!

நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்ற

உடலுறவுக்காக மனைவிகளை Exchange செய்யும் கும்பல்… பகீர் சம்பவத்தில் நடந்தது என்ன?

உடலுறவுக்காக கணவன்மார்கள் தங்களது மனைவிகளை வேறொரு

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தாமரைக்கு அடுத்த வாய்ப்பு: இந்த முறை டைட்டில் நிச்சயம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களுக்கு மேலாக சிறப்பாக விளையாடிய தாமரை கடந்த ஞாயிறன்று எவிக்சன் செய்யப்பட்டார் என்பதும் அவரது வெளியேற்றும் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை

பிரியங்காவை மெயின் டோர் வழியாக வெளியே வரச்சொன்ன பிக்பாஸ்: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது என்பதும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 100 வது நாளாக நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.