பிரபல அரசியல் தலைவரை சந்தித்த லதாரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் பணி முடிந்துவிட்டதால் ரஜினியின் அடுத்த அறிவிப்பு அதிரடியான கட்சி அறிவிப்புதான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். முக்கிய கட்சியில் உள்ள பலர் ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சியில் சேரவும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது
இந்த நிலையில் இன்று ரஜினியின் மனைவி லதா ரஜினி மும்பையில் பிரபல அரசியல்வாதியான ராஜ்தாக்கரே மற்றும் அவருடைய மனைவி ஷர்மிளா ஆகியோர்களை சந்தித்து பேசியுள்ளார். நட்புமுறையிலான இந்த சந்திப்பில் சினிமா, அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகள் குறித்து லதாரஜினி பேசியதாக தெரிகிறது. கடந்த சிலநாட்களாகவே பிரதமர் மோடி உள்பட பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ராஜதாக்கரேவை லதாரஜினி சந்தித்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout