தல தோனிக்கு லதா மங்கேஷ்கர் வைத்த உருக்கமான வேண்டுகோள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக வெறித்தனமான தல தோனி விளையாடியபோதிலும் துரதிர்ஷ்டவசமான கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு எதிராக திரும்பிவிட்டது.
இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களும், ஆதரவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகிறது. தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றுகூட சிலர் கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் பழம்பெரும் பாடகியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தோனி ஓய்வு முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகளை கேட்டு வருகிறேன். தயவுசெய்து ஓய்வு முடிவை தோனி எடுக்க வேண்டாம். உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை. நீங்கள் ஓய்வு குறித்த முடிவை இப்போது அறிவிக்க வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் வெகு அரிதாகவே டுவிட்டரில் ஒருசில கருத்துக்களை தெரிவித்து வரும் வழக்கத்தை உடையவர். தோனியின் மீதுள்ள அன்பால் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Namaskar M S Dhoni ji.Aaj kal main sun rahi hun ke Aap retire hona chahte hain.Kripaya aap aisa mat sochiye.Desh ko aap ke khel ki zaroorat hai aur ye meri bhi request hai ki Retirement ka vichar bhi aap mann mein mat laayiye.@msdhoni
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments