லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்துக்கு யார் வாரிசு? வெளியான புதுத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைக்குயில் லதா மங்கேஷ்கரை அவருடைய மென்மையான குரலுக்காக மட்டுமல்ல, எளிமை மற்றும் கனிவான குணத்திற்காகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரிதும் விரும்புகின்றனர். இந்நிலையில் இசையையே தனது வாழ்க்கையாக நினைத்த லதா இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவந்தார். இதனால் அவருடைய கோடிக்கணக்கான சொத்துகளுக்கு யார் வாரிசு என்ற கேள்வி இணையத்தில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
காரணம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவந்த லதா மங்கேஷ்கர் தன்னுடைய 70 வருட அயாராத உழைப்பினால் பல கோடிக்கணக்கான பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார். அந்த வகையில் மும்பையின் பெடர் சாலையில் உள்ள பிரபுகுஞ்ச் பகுதியில் சொகுசு பங்களா ஒன்று அவருக்கு சொந்தமாக இருக்கிறது.
இதைத்தவிர கார் விரும்பியான அவருக்கு “ப்யூக்“, “செவர்லே“, “கிரைஸ்லர்“ போன்ற பல ஆடம்பரக் கார்களும் சொந்தமாக இருக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கான தனது பாடல்களுக்கும் அவர் ராயல்டி வைத்திருக்கிறார். அந்த வகையில் பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு 360 கோடி எனச் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் அவருடைய சொத்து மதிப்பு 108 முதல் 115 கோடியாக இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.
இப்படியிருக்கும்போது அவருடைய சொத்துகள் அனைத்தும் யாருக்கு கிடைக்கும் என்றொரு சந்தேகம் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. சிறிய வயதிலேயே தந்தையை இழந்த லதா மங்கேஷ்கர் குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்ததால் குடும்பப் பாரத்தை சிறிய வயதிலேயே சுமக்கத் துவங்கியிருக்கிறார். அந்த அடிப்படையில் 13 வயதில் பாடத் துவங்கிய அவர் 25 ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பிற்காலத்தில் பழம்பெரும் பாடகியாக உயர்ந்த லதா மங்கேஷ்கர் தாதா சாகேப் பால்கே விருது முதற்கொண்டு பல உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் அவருடைய ஒரு பாடலுக்கு ரூ.40 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஆஷா போஸ்லே, மீனா கட்கர், உஷா மங்கேஷ்கர் 3 தங்கைகள் உள்ளனர். இதில் ஆஷா போஸ்லே பிரபல பாடகியாக வலம்வருகிறார். இவர்களைத் தவிர ஹிருதயநாத் மங்கேஷ்கர் என்றொரு இளைய சகோதரரும் உள்ளார். இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாத லதா மேங்கேஷ்கர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கருடனே கழித்திருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளரான ஹிருதயநாத் தன்னுடைய அக்கா லதா மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் லதாவின் இறுதிச் சடங்கையும் இவரே செய்துள்ளார். அந்த வகையில் லதாவின் சொத்துக்கள் அனைத்தும் ஹிருதயநாத்திற்கே கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆனால் லதா மங்கேஷ்கர் தன்னுடைய அப்பாவின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிர்வகித்து வந்ததாகவும் அனைத்துச் சொத்துகளும் அந்த அறக்கட்டளையின் பெயரிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments