கடந்த வார திரைப்படங்களின் வசூல் நிலவரம்: ஒரு பார்வை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வாரம் தமிழில் கேணி, 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த படங்களின் வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
கேணி: ஜெயப்ரதா, நாசர், ரேவதி, அனுஹாசன் உள்பட பலர் நடிப்பில் உருவான கேணி, கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனதூ. இந்த படம் சென்னையில் வாரயிறுதி நாட்களில் 15 திரையரங்குகளில் 66 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.10,26,374 வசூல் செய்து சராசரி வசூல் படமாக உள்ளது.
6 அத்தியாயம்: 6 குறும்படங்கள் அடங்கிய இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 10 திரையரங்குகளில் 30 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,17,695 வசூல் செய்துள்ளது.
கூட்டாளி: அருள்தாஸ், கெளசல்யா நடிப்பில் மதி இயக்கத்தில் வெளியான இந்த படம் சென்னையில் வாரயிறுதி நாட்களில் ரூ.4,00,924 வசூல் செய்துள்ளது.
காத்தாடி: அவினேஷ் கார்த்திக், சாய்தன்ஷிகா நடிப்பில் கல்யாண் இயக்கிய இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் ரூ.3,18,791 வசூல் செய்துள்ளது.
கடந்த வாரம் வெளியான நான்கு படங்களுமே சராசரி வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com