கடந்த வார திரைப்படங்களின் வசூல் நிலவரம்: ஒரு பார்வை

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

கடந்த வாரம் தமிழில் கேணி, 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த படங்களின் வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

கேணி: ஜெயப்ரதா, நாசர், ரேவதி, அனுஹாசன் உள்பட பலர் நடிப்பில் உருவான கேணி, கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆனதூ. இந்த படம் சென்னையில் வாரயிறுதி நாட்களில் 15 திரையரங்குகளில் 66 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.10,26,374 வசூல் செய்து சராசரி வசூல் படமாக உள்ளது.

6 அத்தியாயம்: 6 குறும்படங்கள் அடங்கிய இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 10 திரையரங்குகளில் 30 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,17,695 வசூல் செய்துள்ளது.

கூட்டாளி: அருள்தாஸ், கெளசல்யா நடிப்பில் மதி இயக்கத்தில் வெளியான இந்த படம் சென்னையில் வாரயிறுதி நாட்களில் ரூ.4,00,924 வசூல் செய்துள்ளது.

காத்தாடி: அவினேஷ் கார்த்திக், சாய்தன்ஷிகா நடிப்பில் கல்யாண் இயக்கிய இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் ரூ.3,18,791 வசூல் செய்துள்ளது.

கடந்த வாரம் வெளியான நான்கு படங்களுமே சராசரி வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜோதிகாவின் நாச்சியார்: ரூ.2 கோடியை நெருங்கிவிட்ட சென்னை வசூல்

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது.

என் கனவு பாத்திரம் 'மயிலு'க்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி: பாரதிராஜா

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என இரண்டு ஸ்ரீதேவி நடித்த படங்களை இயக்கிய பாரதிராஜா, அவருடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

ஸ்ரீதேவியின் மலரும் நினைவுகள் குறித்து சிவகுமார்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஸ்ரீதேவியுடன் மூன்று படங்கள் நடித்த பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவரது மறைவு குறித்து கூறியதாவது:

நான் இரண்டுவிதமான ஸ்ரீதேவியை பார்த்துள்ளேன் ரஜினிகாந்த் பேட்டி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்திருந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.