கடைசி ஒரு பந்தில் 5 ரன், மனநிலை எப்படி இருந்தது: தினேஷ் கார்த்திக்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 போட்டியின் இறுதிபோட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி, கோப்பையை வெல்ல கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்தார்
இந்த பந்தை எதிர்கொண்டபோது இருந்த மனநிலை குறித்து தினேஷ் கார்த்திக் கூறியபோது, 'கடைசி பந்தில் சிக்ஸ் அடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் ஒருவேளை சிக்ஸ் அடிக்க முடியாவிட்டாலும் பவுண்டரி அடித்து ஆட்டத்தை டிரா செய்து சூப்பர் ஓவர் விளையாடலாம் என்று நினைத்தேன்.
பவுலர் ஓடிவரும்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது நான் சிக்ஸ் அடிப்பேன் என்று. இருப்பினும் பந்து வரும் திசையை கணித்து அடித்தேன். அது சிக்ஸ் ஆக மாறி வெற்றியை தந்தது. எனக்கு இருந்த அதே டென்ஷன் பவுலருக்கும் இருந்திருக்கும். என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com