ரூ.500, ரூ.1000-க்கு இன்று கடைசி நாள். சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே
- IndiaGlitz, [Thursday,November 24 2016]
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் நாட்டில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இருப்பினும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை ஒருசில இடத்தில் மட்டும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் போன்ற இடங்களில் நவம்பர் 24 வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை இன்று நள்ளிரவு 12 மணிக்குள் மேற்கண்ட இடங்களில் மாற்றிக்கொள்ளுங்கள். ஒருவேளை இன்றுக்குள் மாற்ற முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை வங்கிக்கணக்கில் செலுத்திக்கொள்ளலாம், அல்லது மார்ச் 31ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம்.