தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்க வேண்டுமா? விண்ணப்பிக்க இன்றே கடைசி…
Send us your feedback to audioarticles@vaarta.com
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கும் வகையில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 25 ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2010 நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தின்கீழ் 25% ஏழை எளிய மாணவர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்க முடியும். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
ஆண்டுதோறும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்.
இந்தச் சலுகையைப் பெறுவதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் இந்த விண்ணப்பத்திற்கான இறுதிநாள் மே 25 ஆம் தேதி என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
எனவே ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள பெற்றோர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் தங்களது குழந்தைகளின் இலவசக் கல்விக்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறை
பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ எனும் இணையதளம் வழியாகத் தங்களது குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் இடம்ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இந்தத் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் தங்களது 8 ஆம் வகுப்பு வரை கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
இந்தத் திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் இணைந்து படிக்க முடியும்.
மேலும் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அறிக்கப்பட்டு உள்ளது.
எனவே 2 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இந்தச் சிறப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments