நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் வீடு திரும்பினார்!!! சாதித்தது எப்படி???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும்போது ஒருசில நாடுகள் மட்டும் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தி வெற்றிப் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தைவான், நியூசிலாந்து, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனா நோய்த்தொற்று இல்லாமல் ஊரடங்கை தளர்த்தி இருக்கின்றன. தற்போது நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆஷ்லி ப்ளூம்ஃபீல்டு, எங்கள் நாட்டில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். எங்கள் நாட்டில் கொரோனா நோயாளியின் எண்ணிக்கை பூஜ்யம் என்றும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
நியூசிலாந்தில் சென்ற மாதத்தின் கடைசியில் பெரும்பாலான ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் நாட்டின் அதிபர் ஜெசிந்தா அர்டெர்ன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இரவு நேர கிளப்புகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் எப்படி சாத்தியமானது எனத் தற்போது உலக நாடுகளும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றன. 50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தில் நோய்த்தொற்று அறியப்பட்ட உடனே 7 வாரங்கள் முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அந்த விதிமுறைகள் கடைபிடிப்பதற்கு ஏதுவான அனைத்து வழிமுறைகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் மக்கள் விதிமுறைகளை சரியாக கடைபிடித்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை அந்நாட்டில் 1154 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். கடைசி நபர் கிட்டத்தட்ட 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு விதிமுறைகள் முற்றிலும் தளர்த்தப்பட்ட உலக நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி நிலைகள் மேம்பட்டு காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. நியூசிலாந்து கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சாதித்ததில் அதிபர் ஜெசிந்தாவின் பங்கும் முக்கியம் என்று பல உலக நாடுகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments