சென்னையில் 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத 7 பகுதிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவும் பகுதி என 7 பகுதிகளை கண்டறிந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த 7 பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக கொரோனா தொற்றின் பாதிப்பு இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அந்த பகுதிகள் இவைதான்:
1. மதுரவாசல் தெரு
2. டேவிட்சன் தெரு,
3. வரதராஜன்பேட்டை(சூளைமேடு)
4. வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை)
5. எல்லையம்மன் கோயில் தெரு(கோட்டூர்புரம்)
6. நேரு தெரு (கல்குட்டை-பெருங்குடி)
7. எம்.ஜி.ஆர். நகர், ( பனையூர் -சென்னை)
இதேபோல் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் பகுதிகளையும் தனிமைப்படுத்தி சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments