முழு ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா… ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கை கிரிக்கெட் அணியில் டெத்-ஓவர் பவுலர் எனப் பெயர் பெற்ற லசித் மலிங்கா அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் ரசிகர்கள் அவரது வரவை மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் லசித் மலிங்காவின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவந்த லசித் மலிங்கா அந்த அணிக்காக கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் விளையாடி உள்ளார். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் வெஸ்ட்இண்டிஸ் அணிக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். இதையடுத்து ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விலகிக்கொண்டார்.
இதனால் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடிவந்த இவர் கடந்த 2020 மார்ச் மாதம் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டிக்குப் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் விக்ரம சிங்கே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டி20 சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் லசித் மலிங்கா விளையாடுவார். அவரது வரவு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பக்கபலமாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே லசித் மலிங்கா தற்போது டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்ட லசித் மலிங்கா டி20 போட்டிகளிலும் எனது ஷுவிற்கு ஓய்வளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் எனது பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றிகள். எதிர்காலத்தில் என்னுடைய அனுபவத்தை இளம் தலைமுறையினருக்காக பகிர்ந்து கொள்வேன்“ எனத் தெரிவித்துள்ளார்.
டி20 போட்டிகளில் நல்ல அனுபவம் கொண்ட லசித் மலிங்கா இதுவரை 85 டி20 போட்டிகளில் விளையாடி 105 விக்கெட்டுகளை குவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லசித் மலிங்காவின் ஓய்வு குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்ததைப் பதிவுசெய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout