லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு: காரணமானவனின் கதி என்ன?
- IndiaGlitz, [Monday,October 02 2017]
அமெரிக்காவில் இன்று நடைபெற்ற இசைநிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இசை நிகழ்ச்சி நடந்த எம்.ஜி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான திடலில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை ரசிக்க திரண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த திடலுக்கு அருகேயிருந்த மண்டலேபே என்ற சொகுசு ஓட்டலின் 32வது மாடியில் இருந்து மர்மநபர் சரமாரியாக கூட்டத்தினர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டான்.
மாறி மாறி சுமார் பத்து துப்பாக்கிகளில் சுட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆங்காங்கே சிதறி ஓடினர். சுமார் பதினைந்து நிமிட தாக்குதலுக்கு பின்னர் அதிரடி படையினர் ஓட்டலின் மாடியை நெருங்கிய நிலையில் அந்த தீவிரவாதி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தான்.
இந்த நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியாகவோ, காயமடையவோ இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.