கேரளா-இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு!!! இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த 2 தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 55 தமிழகர்கள் உயிரிழந்து இருப்பதாக தமிழகத்தின் கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் தகவல் தெரிவித்து உள்ளார். கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டத்திலுள்ள பாரதிநகர் பகுதியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கேரள மாநிலத்தின் பெட்டிமாடாவில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் தேயிலை பறிப்பதற்காக அங்கேயே தங்கி வேலைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக கேரளாவின் இடுக்கி, பத்தனம் திட்டா, வயநாடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் பெட்டிமாடா பகுதியிலுள்ள எஸ்டேட்டில் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து தங்கியிருந்த 80 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கியதாக நேற்று முதல் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நேற்றுகாலை முதலே அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கனமழை காரணமாகவும் கடுமையான நிலச்சரிவின் காரணமாகவும் தேடுதல் பணி தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.
நேற்று மாலை வரை 7 உடல்கள் மீட்கப் பட்டதாகக் செய்திகள் வெளியான நிலையில் தற்போது 55 தமிழர்கள் இதுவரை உயிரிழந்து இருப்பதாக கயத்தாறு வட்டாட்சியர் அதிகாரப் பூர்வமாக தகவல் அளித்து இருக்கிறார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கயத்தாறு வட்டாட்சியரை அணுகி கேட்டபோது இத்தகவலை அவர் வெளியிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com