தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… 50 பேர் உயிரிழந்த சோகம்!!!
- IndiaGlitz, [Saturday,September 12 2020]
காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும் அதனால் அப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெட்ராய்ட் எனப்படும் தங்கச் சுரங்கத்தில் இன்று பிற்பகலில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் இளைஞர்கள், குழந்தைகள் என 50 பேர் உயிரிழந்து விட்டனர் எனறும் தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் நிலச்சரிவு குறித்து விசாரணை செய்ய அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா பேரிடர்க்கு இடையில் இதுபோன்ற நிலச்சரிவு, கனமழை, நிலநடுக்கம் போன்ற ஆபத்துகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் உலக மக்களிடையே ஒருவித பதற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.