கட்டுமான நிறுவனத்தின் மோசடியால் கோடிக்கணக்கில் ஏமாந்த நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன்! பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 28 2020]

பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றின் மோசடியால் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி தெண்டுல்கர் உள்ளிட்ட பல விஐபிக்கள் கோடிக்கணக்கில் ஏமாந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூரைச் சேர்ந்த முன்னணி நில விற்பனை நிறுவனம் ஒன்று நீர் ஆதாரம் உள்ள புறம்போக்கு நிலத்தை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கள் உள்ளிட்ட பல கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது

விவசாயிகளிடமிருந்து புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கிய இந்த நிறுவனம், ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பல பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி தெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த நிலத்தில் கட்டுமானங்கள் கட்ட முடியாது என்றும் அவை நீர்நிலை புறம்போக்கு என்றும் தெரிய வந்துள்ளதால் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த குறிப்பிட்ட கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அந்த கட்டுமான நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

அன்லாக் 3.0 நேரத்தில் தியேட்டர்களை திறக்க பரிந்துரை: ஆனால் என்னென்ன நிபந்தனைகள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகளை

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் செய்த மிகப்பெரிய உதவி!

நடிகர், நடன இயக்குனர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் இந்த கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

டி.இமானின் வாழ்த்துக்களை பெற்ற 13 வயது பிரபலம்!

கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆதித்யா சுரேஷ் என்பவர் இந்த சின்ன வயதிலேயே பாடுவதில் திறமையுள்ளவர் என்பதும், அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது

தமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 5வது நாளாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது

தல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் என்ற புகழைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்பவர் தல அஜித் அவர்களின் படத்திற்கு அறிமுக பாடலை எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார்