4 மடங்கு அதிக வேகத்துடன் இயங்கும் ஸ்டைலிஷ் கார்… புது வரவு!
- IndiaGlitz, [Wednesday,February 23 2022]
இந்தியாவில் லம்போகினி கார் நிறுவனம் புதுமாடல் கார் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட 7.5 கோடி மதிப்புள்ள இந்தக் காரை வெறும் 9 வினாடிகளில் 200 கி.மீ வேகத்திற்கு இயக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
லம்போகினி கார் நிறுவனம் தனது ஹுராகன் ஈவோ காரில் புது அப்டேட்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் Huracan Evo fluo Capsule எனப்படும் புதிய காரில் 5,200 சிசி கொண்ட V10 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 630 bhp பவருடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் லம்போகினி நிறுவனத்தின் பழைய காரான ஊர் இனோவாவைவிட 4 மடங்கு அதிக வேகத்துடன் இயங்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
மேலும் 2.9 விநாடி நேரத்திற்குள்ளாகவே இந்தக் காரை 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கத் துவங்க முடியும் என்றும் 200 கிலோ மீட்டர் வேகத்தை இந்தக் காரால் வெறும் 9 நொடிகளில் இயக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தனை வேகமான காரை நம்மூர் சாலைகளில் இயக்க முடியுமா? என்ற அடுத்த கேள்வி நமக்கு எழத்தான் செய்யும்.
நம்மூர் சாலைகளுக்கு ஏற்ப இந்தக் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 135 மிமீட்டலிருந்து 175 மிமீட்டராக அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் வேகமான காரை அனைத்து சாலைகளுக்கும் ஏற்ப இயக்க முடியும் என்றும் 200 கிலோ வேகத்தில் சென்றால் கூட காரில் அமர்ந்தபடி நிதானமாக தேநீர் அருந்த முடியும் என்றும் அதன் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
லம்போகினியின் புது வரவான Huracan Evo fluo Capsule மாடல் காரானது 1,422 கிலோ எடையுடன் 4-5 லிட்டர் பெட்ரோல் திறனுடன் படு மாடலான ஸ்டைலிஷ்களில் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.