லாலு பிரசாத் யாதவுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை: நீதிமன்றம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மூன்று கால்நடை தீவன வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர் சிறையில் இருக்கும் நிலையில் சமீபத்தில் 4வது வழக்கிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படார். இந்த நிலையில் இந்த வழக்கில் அவருடைய தண்டனை குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் குறித்த 4வது வழக்கில் லாலு பிரசாத யாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏற்கனவே தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனையும், சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும் லாலுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிஸ்டம் புரியாதவர், கருத்து கந்தசாமி: ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கிய ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலைவர்கள் இல்லாத வெற்றிடம் இருப்பதாக கூறப்படுகிறது

அப்பல்லோ பிரதாப் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

அப்பல்லோ மருத்துவமனை குழுவின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருடைய அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 30ல் சமந்தாவின் அடுத்த படம் ரிலீஸ்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வரும் 'சீமராஜா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில்

இன்று ஸ்டாலின் தினம்

ரத யாத்திரை நடந்தபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அதனை கடுமையாக எதிர்த்தார். அவருடைய எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த இந்து ஆதரவாளர்கள், ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் இந்து மக்களின் வாக்குகள் தேவையில்லை