லாலு பிரசாத் யாதவுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை: நீதிமன்றம் அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,March 24 2018]
முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீதான மூன்று கால்நடை தீவன வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர் சிறையில் இருக்கும் நிலையில் சமீபத்தில் 4வது வழக்கிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படார். இந்த நிலையில் இந்த வழக்கில் அவருடைய தண்டனை குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் குறித்த 4வது வழக்கில் லாலு பிரசாத யாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஏற்கனவே தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனையும், சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும் லாலுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.