லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன் திடீர் உயிரிழப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

திருச்சி லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் திடீரென உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.  இந்த வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்து முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை மட்டுமின்றி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளை, பாலக்கரை திருட்டு வழக்குகளும் முருகன் மீது இருந்தது. அதுமட்டுமின்றி முருகன் மீது சென்னையில் 12, கர்நாடகத்தில் 46 வழக்குகள் இருந்தன.

இந்த நிலையில் சிறையில் இருந்த முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சற்றுமுன் வெளீயான தகவலின்படி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொள்ளையன் முருகன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

More News

நடிகை குஷ்பு கைது!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சிதம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென முட்டுக்காடு அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளது

புருனே நாட்டு இளம் வயது இளவரசர் திடீர் மரணம்!!! உலகத் தலைவர்கள் இரங்கல்!!!

புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போங்கியாவின் மகனும் அந்நாட்டு இளவரசருமான ஹாஜி அப்துல் அசம்

'டாவின்சி கோட்' போல் தமிழில் ஒரு படம்: பிரபல இயக்குனர் தகவல்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஹாலிவுட் திரைப்படம் 'தி டாவின்சி கோட்.

சிம்புவின் முதல்பட நாயகியின் பெற்றோருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சிம்பு ஹீரோவாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' என்ற திரைப்படத்தின் நாயகி சார்மியின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 

மீண்டும் தல அஜித்துடன் இணையும் காமெடி நடிகர்: படப்பிடிப்பு தொடக்கம்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது