கொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் சுவரில் ஓட்டை போட்டு சில கொள்ளையர்கள் கோடிக்கணக்கான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது தெரிந்ததே. இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணை செய்ததில் கொள்ளையன் முருகன் உட்பட ஒரு கும்பல் பிடிபட்டது மட்டுமன்றி கிட்டத்தட்ட கொள்ளை போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில் முருகனை ஒருமுறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று போலீசாரிடம் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போலீசார் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது
முருகனை நேரில் சந்தித்த லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் முருகனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டுள்ளார். இவ்வளவு பாதுகாப்புயையும் மீறி நகைகளை கொள்ளையடித்தது எப்படி? சரியாக அந்த சுவரில் ஓட்டை போட்டால்தான் நகைகள் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும் என்பது எப்படி தெரியும்? என்று கேட்டார்
அதற்கு முருகன் 'தன்னுடைய மனைவியுடன் பலமுறை கடைக்கு வந்துள்ளதாகவும், தன்னுடைய மனைவி நகைகளை பார்க்கும்போது தான் கடையை சுற்றி நோட்டமிட்டு எந்த சுவற்றில் ஓட்டை போட்டால் உள்ளே நுழைய முடியும் என்பதை கணித்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிலை அடுத்து முருகனுக்கு லலிதா ஜூவல்லரி உரிமையாளர் நன்றி தெரிவித்துள்ளார்.
எதற்கு இந்த நன்றி என முருகன் கேட்ட போது 'தன்னுடைய கடை ஊழியர்கள் ஒத்துழைப்புடன் தான் கொள்ளை நடந்திருக்கும் என்று தான் சந்தேகப்பட்டதாகவும், வேலை பார்க்கும் கடையிலேயே கொள்ளையடிக்கும் அளவுக்கு தன்னுடைய ஊழியர்களுக்கு எப்படி பொருளாதார பற்றாக்குறை வந்தது? அவர்களை தான் சரியாக கவனிக்கவில்லையா? என்ற குற்ற உணர்ச்சி தனக்கு இருந்ததாகவும் இப்போது அந்த சந்தேகம் நீங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். அவருடைய பதில் முருகனை மட்டுமின்றி அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளையும் ஆச்சரியப்பட வைத்ததாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments