டெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்?
- IndiaGlitz, [Friday,April 16 2021] Sports News
டெல்லி கேபிடள்ஸ் அணியில் அமித் மிஸ்ரா போன்ற மூத்த வீரர்கள் இருக்கும்போது அறிமுகப் போட்டியிலேயே இளம் வீரரான லலித் யாதவ் களம் இறங்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் யார் இந்த லலித் மிஸ்ரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு டெல்லி கேபிடள்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர்தான் இந்த லலித் யாதவ். ஆனால் கடந்த ஆண்டு அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் முதல் போட்டியிலேயே 24 வயதான லலித் யாதவ் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.
அதோடு இவர் சையத் முஷ்டாக் கோப்பை போட்டியிலும் விஜய் ஹசாரே போட்டியிலும் திறமையாக ஆடி ரசிகர்களிடையே தனிக்கவனம் பெற்று இருக்கிறார். மேலும் இந்தப் போட்டி நடைபெறும் மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு ஏற்றது என்பதால் ஆல்ரவுண்டர் என்ற வகையில் லலித் யாதவ் நம்ப்படும் ஒரு வீரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுடன் இவர் கூட்டணி வைத்து முதல் போட்டியில் ஆடிய ஆட்டமும் ரசிகர்களிடையே தனிக் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கையே தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மூத்த வீரர்கள் கலந்து கட்டி விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் மரண அடி வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி அணியின் பெருத்த நம்பிக்கையாக இருந்து அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசி 8 விக்கெட் இழப்பிற்கு 147 என்ற நிலைக்குக் கொண்டு சென்றார். இதனால் மூத்த வீரர்கள் பலரும் கைவிட்ட நிலையில் தனி ஆளாக நின்று டெல்லி அணியை வலிமைப்படுத்தினார் என்பது போல ரிஷப் பண்ட் பாராட்டப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.