'லால் சலாம்' டிரைலர்.. ரசிகர்களை அதிருப்தி அடைய செய்த அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்த நிலையில் சற்று முன் வெளியான இன்னொரு அறிவிப்பு ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் 5 மணிக்காக காத்திருந்தனர். ஆனால் சற்றுமுன் லைகா நிறுவனம் தொழில்நுட்ப காரணத்தால் இரவு 7 மணிக்கு ’லால் சலாம்’ டிரைலர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி விடும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், ப்ரவீண் பாஸ்கர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Alert! 🚨 Due to technical reasons, LAL SALAAM Trailer release has been postponed to 7PM today! 🕖 Stay tuned for an electrifying unveiling! 🔥#LalSalaam 🫡 #LalSalaamTrailer
— Lyca Productions (@LycaProductions) February 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com