கபில்தேவ் பிறந்தநாளில் ரஜினி படக்குழு செய்த மரியாதை.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ரஜினியின் ’லால் சலாம்’ படக்குழு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் கபில்தேவ் அவராகவே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் அவர் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் ஒருமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கபில்தேவ் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரஜினியுடன் கபில்தேவ் இருக்கும் புகைப்படத்தை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இருவரும் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் வகையில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ஆக்கி வருகிறது. இதனை அடுத்து இந்த போஸ்டருக்கு லைக், கமெண்ட் குவிந்து வரும் நிலையில் கபில்தேவுக்கு ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.