ரஜினியின் 'லால் சலாம்'.. தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,October 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4:30 மணிக்கு ’லால் சலாம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் இந்த படம் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ‘ஜெயிலர்’ படத்தை போல மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றும் கூறப்படுகிறது

More News

'ஏகே 63' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. 'ஏகே 64' இயக்குனர் இவரா? அடித்துவிடும் இணையவாசிகள்..!

அஜித் எப்போதும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட பாதி முடிந்த பின்னர் தான் அடுத்த படம் குறித்து யோசிப்பார் என்பதும் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிந்ததே.

'ஜப்பான்', 'ஜிகர்தண்டா 2' வை அடுத்து தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்..!

வரும் தீபாவளிக்கு கார்த்தி நடித்த 'ஜப்பான்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்

'என்னுயிர் தோழன்' பாபு வீட்டில் மூன்றே வாரத்தில் இன்னொரு சோகம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'என்னுயிர் தோழன்'  என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் பிறகு பாபு சுமார் பத்து படங்களில்

தொழிலதிபரை மணந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்த நடிகை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.  

நல்லா ஏத்தி விட்றாளுக, ஆனாலும் எதிலும் மாட்ட மாட்டேங்குறான்.. தனியாக புலம்பும் விசித்ரா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா சக போட்டியாளர்கள் குறித்து தனியாக புலம்பி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.