ரஜினியின் 'லால் சலாம்'.. தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4:30 மணிக்கு ’லால் சலாம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் இந்த படம் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ‘ஜெயிலர்’ படத்தை போல மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றும் கூறப்படுகிறது
We are proud to join hands with @LycaProductions for the Tamil Nadu Theatrical distribution of #LalSalaam 🫡#LalSalaamFromPongal #MoideenBhaiArrivesOnPongal🔥@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @DOP_VishnuR @RamuThangraj @BPravinBaaskar… pic.twitter.com/RD3uhiPGXh
— Red Giant Movies (@RedGiantMovies_) October 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com