திடீரென பரவும் 'லால் சலாம்' படத்தின் வதந்தி.. தயாரிப்பு தரப்பு விளக்கம் அளிக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படம் ஓடிடியில் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டதாகவும் அதனால் தான் இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவில்லை என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டியில் கூறியிருந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம் பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே தான் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ’லால் சலாம்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமை பெற்ற நிறுவனம் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் போஸ்டருடன் கூடிய செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆனால் இந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் இது ஒரு ஃபேன்மேட் போஸ்டர் என்றும் எனவே இதில் உள்ள தகவல்களும் உண்மையானது அல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது.
எனவே செப்டம்பர் 20 ஆம் தேதி ஓடிடியில் ’லால் சலாம்’ திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுவது வதந்தி என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையே தயாரிப்பு நிறுவனம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout