'லால் சலாம்' படத்தின் சிங்கிள் பாடல்.. தேனிசை தென்றலின் உருக வைக்கும் குரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் தேவா பாடியுள்ளதை அடுத்து அவரது உருக வைக்கும் குரலில் உருவான இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
எல்லாமும் இங்கே அல்லா உன்னாலே ஆகும்
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்
ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனா ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
வல்லோனே நான் உன்னை காப்பேனோ துன்பத்திலே
சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளானனே சொல்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, நிரோஷா மற்றும் சிறப்பு தோற்றத்தில் கபில்தேவ் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், ப்ரவீண் பாஸ்கர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com