ஓடிடியில் முற்றிலும் மாறுபட்ட 'லால் சலாம்'..ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு.. ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பதும் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய போது ’முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது என்றும் அதனால் தான் சில காட்சிகளை இணைக்க முடியவில்லை’ என்றும் கூறியிருந்தார். மேலும் தொலைந்த காட்சிகள் கிடைக்கும் வரை ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் செய்யப் போவதில்லை என்று ஓடிடி நிறுவனம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து கூறிய போது ’லால் சலாம்’ படத்தின் முற்றிலும் மாறுபட்ட பதிப்பு விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்றும் இது தியேட்டர் பதிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைந்து போன காட்சிகளில் இருந்து சிலவற்றை எங்களால் மீட்டெடுக்க முடிந்தது என்றும் அதன் பிறகு மீண்டும் எடிட் செய்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் முதலில் நாங்கள் இந்த படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதேபோல் தற்போது இந்த படம் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மீட்டெடுக்கப்பட்ட பகுதிக்கு இசையமைத்து உள்ளார் என்றும் அதற்காக அவர் கூடுதல் ஊதியம் எதையும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே முற்றிலும் வித்தியாசமான ’லால் சலாம்’ திரைப்படம் ஓடிடியில் இருப்பதால் அந்த பதிப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com