மீண்டும் 'லால்சலாம்' படத்திற்கு வந்த ரஜினிகாந்த்.. ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த கட்டமாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ’லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெறும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
முதல்கட்டமாக ரஜினிகாந்த், தனது பகுதியின் டப்பிங் பணியை செய்யவுள்ளார். இந்த பதிவில் ‘டப்பிங் வித் டாட்’ என்ற ஹேஷ்டேக்கையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது
’லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணி முடிந்தவுடன் அவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தை முடித்தவுடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments