'லால் சலாம்', 'கோட்' படத்துடன் கனெக்சன் ஆனது 'இந்தியன் 2'.. என்ன செய்து வைத்திருக்கிறார் ஷங்கர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ மற்றும் தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படங்களுடன் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படம் கனெக்சன் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தற்போது அனைத்து துறைகளிலும் புகுந்துள்ள ஏஐ டெக்னாலஜி சினிமா துறையிலும் புகுந்துள்ளது என்பதும் குறிப்பாக மறைந்த பாடகர்கள் குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் உயிர்ப்பித்துக் கொண்டு வருவது சில சமீப காலமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பாய் பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோர் குரல்களில் ஒரு பாடல் உருவானது என்பது தெரிந்தது. அதேபோல் தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் இளையராஜாவின் மகள் பவதாரணி குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது ’இந்தியன் 2 ’ படத்தில் மறைந்த மனோபாலா மற்றும் விவேக் ஆகியோர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கு ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் நினைத்தால் மிமிக்ரி கலைஞர்களை வைத்து விவேக், மனோபாலாவுக்கு டப்பிங் செய்திருக்கலாம். ஆனால் எதிலும் பெர்ஃபெக்க்ஷன் பார்க்கும் ஷங்கர் துல்லியமாக அவர்களது குரல் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக ஏஐ டெக்னாலஜி மூலம் இந்த இரண்டு நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ’லால் சலாம்’ மற்றும் ’கோட்’ படத்திற்கு ஏஐ டெக்னாலஜி மூலம் குரலை மாற்றிய கிருஷ்ண சேத்தன் என்பவர் தான் ’இந்தியன் 2’ படத்திற்கும் பணி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே ’இந்தியன் 2’ படத்தை பார்க்கும்போது மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் உயிரோடு இருந்தால் எப்படி டப்பிங் செய்து இருப்பார்களோ அதே போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments