பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் தன்னுடைய கேரக்டருக்காக குதிரைப் பயிற்சி செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , அமிதாப், ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா உள்பட பலர் நடிக்கவிருப்பதையும் லால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். நடிகர் விஷாலின் சண்டைக்கோழி உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் லால் என்பது குறிப்பிடத்தக்கது.

’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.