சிம்புவுடன் சீரியஸாக விவாதம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

பெண்ணுரிமை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை பின்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

இதேபோல் தைரியமாக தனது கருத்தை வெளியிடும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. தனது தைரியமான கருத்துக்களால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் துணிச்சலுடன் செயல்படுபவர் சிம்பு.

இந்த நிலையில் சிம்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் சமீபத்தில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ள லட்சுமிராமகிருஷ்ணன், 'சிம்பு எனக்கு போன் செய்திருந்தார். இரண்டு பேருமே எங்களுடைய கருத்தை பரிமாறிக் கொண்டோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். தன்னை ஒரு பெரிய ஸ்டாராக காட்டிக் கொள்ளாமல் என்னிடம் அவர் பேசினார்' என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் நாயகி தமன்னாவின் உடை குறித்து லட்சுமிராமகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டாரின் 'கபாலி'யை அடுத்து புதிய சாதனை நிகழ்த்திய அஜித்தின் 'விவேகம்'

கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை செய்வதற்கு முன்னரே அந்த படத்தின் டீசர், டிரைலர், ஆகியவை வெளியாகி யூடியூபில் பார்வையாளர்கள் மற்றும் லைக்குகள் ஆகியவற்றில் சாதனை செய்து வருகிறது.

கோடிகளுக்கு விலைபோகாத விராத்கோஹ்லி! இந்தியன்டா...

கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் 'அயல்நாட்டு குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவரது தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரபல நடிகரின் மகனுக்கு கைகொடுத்து உதவும் சிவகார்த்திகேயன்

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி அறிமுகமாகும் 'அதாகப்பட்டது ஜனங்களே' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 16ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: 2 வரிகளில் பயோடேட்டா அனுப்பிய சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய பயிற்சியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.