திரைக்கு வருகிறது சென்னையின் பெருவெள்ளம்

  • IndiaGlitz, [Sunday,February 28 2016]

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு கிட்டத்தட்ட சென்னை நகரமே மூழ்கியது என்பதை அனைவரும் அறிவோம். டிசம்பர் 1ஆம் தேதி ஒரே நாள் இரவில் சென்னை மக்களின் வாழ்வாதாரம் புரட்டி போடப்பட்டது. வீடு வாசல் இன்றி பலர் வீதிக்கு வந்த அவலக்காட்சியையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இந்த வெள்ளம் குறித்து தமிழில் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பிரபல நடிகையும் பெண் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு அவர் 'டிசம்பர் 1-2015' என்ற டைட்டிலை தேர்வு செய்திருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை அவர் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'அம்மணி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் 'அம்மணி' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. முதிய பெண்மணி ஒருவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.