இதுதான் அடல்ட் காமெடியா? கொந்தளித்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வெள்ளியன்று வெளியான கவுதம் கார்த்திக்கின் அடல்ட் காமெடி திரைப்படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி என்றாலும் இந்த படத்திற்கு திரையுலகினர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் இந்த படத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் பிரபல குணச்சித்திர நடிகையும் இயக்குருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது இந்த படம் தனது கொந்தளிப்பான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
இந்த சமூகத்தில் அனைவருக்கும் பொறுப்புணா்வு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது நல்ல விஷயமில்லை
ஏ படம், நகைச்சுவை படம் என அனைத்து பிரிவுகளிலும் படம் தயாரிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அந்த படங்கள் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். பெண்களை அவமதிப்பதும், இழிவாக பேசுவதும் தான் அடல்ட் காமெடியா? சென்சார் போர்டு இதை எப்படி அனுமதித்தது?
இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய படங்களிலும் அடல்ட் காமெடி காட்சிகள், வசனங்கள் இருந்தன. ஆனால் அவை ரசிக்கும் விதமாகவும், ஆபாசம் இல்லாமலும் இருந்தது. ஆனால் இந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் வெறுக்கும் வகையில் அமைந்துள்ளது' என்று நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments