நீதிமன்றத்தின் வரிவிலக்கு உத்தரவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்படங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் வரிவிலக்கு சலுகை முழுமையாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இதனால் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இனிமேல் ரூ.120க்கு பதில் ரூ.84 மட்டுமே செலவு ஆகும். இந்நிலையில் பிரபல குணசித்திர நடிகை மற்றும் இயக்குனர் இந்த உத்தரவு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது:
'தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதற்காக வரிவிலக்கின் நோக்கத்தை முற்றிலும் தவறாக அர்த்தம் கொண்டுவிட்டார்கள். அதிகச் சம்பளம் மற்றும் திருட்டு டிவிடி காரணமாக தயாரிப்பாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். திரைத்துறையில் நீடிப்பதே கடினமாகிவிட்டது. இதுபோன்ற விஷயங்களில்தான் தவறுகள் திருத்தப்படவேண்டும்.
தயாரிப்பாளர் அஹோரம் சொன்னது போல, கதாநாயகர்கள் தயாரிப்பாளரை அவதிக்கு ஆளாக்காமல், போலியான மிகைப்படுத்தலில் இருந்து இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்வதே, இதற்கு ஒரு தீர்வாக அமையும்.
முன்பு சூப்பர் ஸ்டார்கள் நியாயமான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது திரையுலகம் நன்றாக இருந்தது. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சுயலாபத்துக்காக போலியான மிகைப்படுத்துதலை உருவாக்கின. இதனால் திரையுலகம் அவதிக்குள்ளானது. நிலையில்லாமல் போனது.
வரிச்சலுகையை மக்களிடமிருந்து பறிப்பது நியாயமல்ல. ஏற்கெனவே ஒரு திரையரங்கில் படம் பார்ப்பது என்பது நடுத்தரக் குடும்பத்துக்கு அதிக செலவை ஏற்படுத்துகிறது. இதனால் திருட்டு டிவிடிக்கள் பெருகிவிட்டன. எண்ணிப் பாருங்கள், ஒரு படம் பார்க்க 4 பேர் உள்ள குடும்பத்துக்கு ரூ. 480 ரூபாய்க்குப் பதிலாக ரூ. 340 மட்டும் செலவு ஆனால் எப்படி இருக்கும்!
திகில், அடல்ட், வன்முறை சார்ந்த படங்களை உருவாக்குவது நம் உரிமை. ஆனால் வரிவிலக்கு சலுகையால் அதிக பெண்கள், குழந்தைகளைத் திரையரங்குக்குக் கொண்டுவரமுடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com