லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் ஐபிஎஸ் நியமனம்....! நடுங்கும் அரசியல் பிரமுகர்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் ஐபிஎஸ்-ஆக இருந்த லட்சுமி அவர்கள், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட உள்ளார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்தே, அரசு அதிகாரிகளின் வேலை குறித்த பணிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இதேபோல் தேர்தலுக்கு முன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி அமைச்சர்கள் ஆட்சியின் போது செய்த குற்றங்கள் குறித்து, ஸ்டாலின் ஆளுநரிடம் புகார்கள் தெரிவித்திருந்தார். அந்தவகையில் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், "அதிமுக அமைச்சர்கள் மீதுள்ள புகார்கள் அனைத்தும் விசாரித்து தண்டனை தரப்படும்" என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து எழுந்த புகார்கள், டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்டவற்றில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின். இதை உறுதிப்படுத்தும் வகையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கெடுத்து வருகின்றார்.
குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்தவர் தான் ஐ.பி.எஸ். அதிகாரி கந்தசாமி. இவரை தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.-யாக தமிழக அரசு நியமித்துள்ளதால், எதிர்க்கட்சி தலைகள் கலங்கத்தில் உள்ளனர் என்றே சொல்லலாம். இதேபோல் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த லட்சுமி அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டது.
யார் இந்த லட்சுமி...?
கடந்த 1997-ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வில், தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி - யாக, பதவியேற்றவர் தான் லட்சுமி. இதன்பின் இவருக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரியாக நிலை உயர்த்தப்பட்டார். இவர் பணியில் நேர்மை, துணிச்சல் உள்ளிட்ட செயல்களால் தான், டி.ஐ.ஜி.யாகப் உயர் பதவியடைந்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பணியாற்றினார். லட்சுமி அவர்கள் திறமையான காவல் அதிகாரி என்ற பாராட்டைப் பெற்றவர். கிட்டத்தட்ட 24 வருடங்கள் தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகவும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளார்.
சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், கோவையில் துணை ஆணையராகவும், சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துறை, இணை ஆணையராகவும் பணியாற்றிய லட்சுமி அவர்களுக்கு, வரும் 2032 வரை காவல் துறையில் பணிபுரியில் கால அவகாசம் உள்ளது. ஆனால் அவர் சென்ற மாதம் தனிப்பட்ட விருப்பத்தால், ஓய்வு பெற விருப்பம் உள்ளதாக, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அரசு அவரின் கடிதத்தை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையுள்ள பெண் காவல் அதிகாரி பணியில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்...!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments