லட்சுமி விலாஸ் வங்கி… கை மாற்றப்படுகிறதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் கிளைப்பரப்பி இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி அதன் நிதி நிலைமை தொடர்பாக தற்போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் கீழ் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஒப்புதல் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள ஒரு வங்கியின் நிதிநிலைமை மோசம் அடைந்து, அதன் பிணை எடுப்பதற்கான உரிமத்தை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி கையப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிபிஎஸ் நிறுவனம் இந்த வங்கியின் 653 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறை கடன்களில் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை நிர்வகிப்பதற்கு உரிமத்தைப் பெற்றிருக்கிறது.
இதற்கான முழு உரிமமும் டிபிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வரை ரிசர்வ் வங்கியிடம் அதன் நிர்வாகம் இருக்கும் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவசர செலவுகள், மருத்துவச் சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத்துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கு மற்றும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
லட்சுமி விலாஸ் வங்கியின் இத்தகைய நிலைமைக்கு அதன் நிகர மதிப்பு எதிர்மறையாகச் சென்றதே காரணம் எனக் கருத்துக் கூறப்படுகிறது. மேலும் இதனால் ஏற்பட்ட நட்டத்தைச் சமாளிக்க போதுமான மூலதனம் இல்லாமலும் அதைத் திரட்ட வேறுவழி எதுவும் இல்லததாலும் தற்போது லட்சுமி விலாஸ் வங்கி வேறு ஒரு நிறுவனத்தின் கீழ் போக இருக்கிறது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த பெரும்பலான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளை திரும்ப பெற்று வருகின்றனர். இதனால் மேலும் பணப்புழக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com