'அருவி'யை மறைமுகமாக தாக்குகிறாரா லட்சுமி ராமகிருஷ்ணன்?
- IndiaGlitz, [Saturday,December 16 2017]
நேற்று வெளியான 'அருவி' திரைப்படம் ரசிகர்கள், ஊடகங்கள், விமர்சகர்களின் பெரும் பாராட்டை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. தமிழ் திரையுலகில் நீண்ட காலத்துக்கு பேசப்படும் ஒரு படம் என்று சமூக வலைத்தள பயனாளிகள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த காட்சிகள் சுமார் அரை மணிநேரம் உள்ளது. இந்த காட்சிகளில் ஒரு அப்பாவியின் பிரச்சனைகளை எவ்வாறு தொலைக்காட்சி துறையினர் வியாபாரமாக்குகின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார்.
இந்த நிலையில் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் அக்சயகுமாரின் பத்மன்' படம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட்டில், 'தமிழ்நாட்டில் மற்றவர்களை கிண்டல் செய்வது, ஒரு நல்ல விஷயத்தை கலாய்த்து தங்களது படத்தில் காட்டுவதுமாக இருக்கின்றனர். ஆனால் பாலிவுட் சினிமாவில் நிஜ ஹீரோக்களை வைத்து படம் எடுக்கிறார். நிஜ 'பத்மன்' அவர்களை பார்த்தது சந்தோஷம்' என்று பதிவு செய்திருந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த டுவீட் 'அருவி' படத்தினை மறைமுகமாக தாக்குவதாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டுவிட்டர் பயனாளிகள் கமெண்ட்டில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.