லட்சுமி ராமகிருஷ்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும்: அருவி நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'அருவி. 100 வருட சினிமாவுலகில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இந்த படத்தை கூறலாம். வெகுசிலரை தவிர இந்த படத்தை கிட்டத்தட்ட அனைவருமே பாராடினர். குறிப்பாக நாயகி அதிதிபாலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது
இந்த நிலையில் இந்த படத்தில் அதிதிபாலனை அடுத்து இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் லட்சுமி கோபால்சாமி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனின் கேரக்டரை ஒட்டி இவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேரக்டர் குறித்து லட்சுமி கோபால்சாமி கூறியபோது, 'சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பல நல்ல விஷயங்களும் வந்துள்ளது. அதை நான் கேள்விப்பட்டுள்ளேன். அருவி படத்தின் எனது கேரக்டர் இந்த அளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்ததற்கு ஒருவகையில் லட்சுமி ராமகிருஷ்ணனும் காரணம். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறினார்.
மேலும் 'அருவி' படத்தில் நடித்த போது ஷூட்டிங் என்றே தனக்கு தெரியவில்லை என்றும், ரொம்ப ஜாலியாகவும் இருந்ததாக கூறிய லட்சுமி, பாகுபலி 'போன்ற சரித்திர படங்களிலும், அழுத்தமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசை என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com