அருள்வாக்கு அன்னபூரணி, கள்ளக்காதலில் இருந்தவரா? நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Monday,December 27 2021]
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அருள்வாக்கு அன்னபூரணி குறித்து நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென தன்னைத்தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்ட அருள்வாக்கு அன்னபூரணி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு தர இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் தன்னை தானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணி கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோக்களும் வைரலாகியுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் அன்னபூரணி ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் ஒருவருடன் திருமணமாகாமல் வாழ்ந்து வந்தது குறித்து பஞ்சாயத்து நடைபெறுகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் முன் நடந்த இந்த பஞ்சாயத்து வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியபோது, ‘அன்னபூரணியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. ஆனால் தன்னை தானே கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களை முட்டாளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருடைய அவதார வீடியோவை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. தயவு செய்து அவரை அவதாரம் என்று காலில் விழுந்து வழிபடும் செயலை யாரும் செய்யாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.
அந்த ஷோக்கு அப்பறம் அவங்க வேற மாதிரி ஆகிட்டாங்க அன்னபூரணி தாயே ?? #annapoorani pic.twitter.com/ytKaFang2b
— Dinesh Udhay (@me_dineshudhay) December 26, 2021