பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்தது ஏன்? பெண் இயக்குனர் பதில்

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் பெரும்பாலான பார்வையாளர்களை கட்டிப்போட்டி வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரே குறையாக பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுவது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் இன்னும் கொஞ்சம் பிரபலமானவர்களாக இருந்திருக்கலாம் என்பதுதான்.

இந்த நிலையில் இயக்குனரும் குணசித்திர நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் தன்னால் குடும்பத்தினர்களை பிரிந்து 100 நாட்கள் இருக்க முடியாது என்றும் பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தற்போது 'ஹவுஸ் ஓனர்' என்ற படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும் இந்த படத்தில் அசோக்செல்வன் நாயகனாவும், மஞ்சிமா மோகன், நந்திதா ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களில் ஒருவர் நாயகியாகவும் நடிக்கவுள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

More News

ரூ.100க்கு வீட்டில் இருந்தே படம் பார்க்கலாம். ஆரி யோசனை

ஜிஎஸ்டி பிரச்சனையால் கடந்த சில நாட்களாக திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

தியேட்டரில் கூட்டம் குறைய கமல் தான் காரணம்: மன்சூர் அலிகான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கிண்டல் செய்து மிமி கிரியேட் செய்தாலும் இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன...

கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் தற்கொலை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது...

சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோவில் அனுமதி

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

மகாபாரத 'திரெளபதி' கேர்கடரில் நயன்தாரா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை அடுத்து 'சங்கமித்ரா' உள்பட பல சரித்திர படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்...