பாலக்காடு ஐயராக வாழ்வது எய்ட்ஸை விட கொடுமையானது: லட்சுமி ராமகிருஷ்ணன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான 'அருவி' திரைப்படம் கோலிவுட் திரையுலகின் ஒரு திருப்புமுனை படம் என்றே கூறலாம். இந்த படத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பினும் அனைத்து தரப்பினர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இந்த படத்தில் 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த காட்சிகள் சுமார் அரை மணி நேரம் வருகிறது. இந்த காட்சிக்கு 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அவர் 'அருவி' படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எய்ட்ஸ் நோயை விட கொடுமையானது ஒன்று உள்ளது என்பது குறித்து ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார்., அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பெண்ணாக, அதுவும் வெளிப்படை தன்மை பேசுபவராக, மீடியாவில் உள்ளவராக, ஓரளவு வெற்றிய அடைந்தவராக, பிராமணச் சமூகத்தில் பிறந்தவராக, அதிலும் பாலக்காடு ஐயர் உச்சரிப்பு கொண்டு தமிழ்நாட்டில் வாழ்வது என்பது எச்.ஐ.வியால் பாதிப்படைவதை விடவும் கொடுமையானது. இந்த வைரஸ் குறித்து யாராவது ஏன் படம் எடுக்கக் கூடாது? இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவர்களை ஏன் கடத்தக்கூடாது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவிற்கு டுவிட்டர் பயனாளிகள் ஆதரவளித்து வருகின்றனர்.
Being a Woman, that too outspoken, in media , successful in some ways and happened to be born in the so called
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) December 19, 2017
' brahmin' community, that too having a Palakkad Iyer accent and settled in Tamilnadu is worse than being affected with HIV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments