மகளின் புகைப்படங்களுடன் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Sunday,September 11 2022]

நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதுமட்டுமின்றி இவர் ’ஆரோகணம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ’ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார் என்பதும் இசைஞானி இளையராஜா இசையமைத்து வரும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது கணவர் மற்றும் மகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’ஓணம் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எங்கள் வீட்டிலும் ஒரு சிறப்பு கொண்டாட்டம் நடந்தது. எங்கள் குழந்தைக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் எங்கள் வீட்டில் ஒரு நெருக்கடி இருந்தது. ஆனால் தற்போது இறைவன் அருளாலும் 20 மருத்துவர்களின் முயற்சியாலும் மகள் ஸ்ரேயா தற்போது நன்றாக உள்ளார். அவர் முழுமையாக குணமடையவில்லை என்றாலும் அவர் தற்போது சிறப்பாக செயல்படுவது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் ஆறுதல் கூறி வருகின்றனர்.