'அந்த பொண்ணை எப்படி எங்க குடும்பத்துல சேர்க்க முடியும்? 'ஆர் யூ ஓகே பேபி' டீசர்..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மருமகளாக வாழ வந்த ஒரு குடும்ப பெண்ணை அந்த குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கும் நிலையில் அந்த குடும்பத்திற்காக களமிறங்கும் தொகுப்பாளினியின் கதை தான் இந்த‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்தின் கதை என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ’ஆரோகனம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இது ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிறகு இந்த படம் நிச்சயம் மீண்டும் ஒரு வெற்றி படமாக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அபிராமி, பவன் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.