லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் நயன்தாராவுக்கு வேண்டாம்: லட்சுமி ராமகிருஷ்ணன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அறம்' திரைப்படம் நல்ல ஹிட்டாகி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவர் பொருத்தமானவர் என்பதை நிரூபித்ததாக கூறப்பட்டது. இந்த படத்தை திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் குணசித்திர நடிகையும் இயக்குனருமான லட்சுமிராமகிருஷ்ணன் இந்த படத்தில் தனக்கு இரண்டு காட்சிகள் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒன்று சகோதரன் கேரக்டர். படத்தின் உண்மையான நாயகனாக இந்த கேரக்டர் இருந்தும் அவனை படத்தின் முடிவில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு குறை. இரண்டாவதாக காப்பாற்றப்பட்ட பெண் குழந்தைக்கு முதலுதவிதான் முதலில் தந்திருக்க வேண்டும். ஆனால் காலில் விழும் காட்சி அங்கே உறுத்துகிறது' என்று கூறியுள்ளார். மேலும் தமிழகம் தற்போதுதான் காலில் விழும் பழக்கத்திலிருந்து மீண்டும் வரும் நிலையில் இந்த காட்சி தேவைதானா? என்று கூறியுள்ளார்
மேலும் ஊடகங்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அவரை பற்றிய செய்தியை வெளியிட வேண்டாம். அது அவருக்கு ஒரு சுமையாக மாறிவிடும் அவர் அந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு பொருந்துவது போன்ற வேடங்களை தேர்ந்தெடுக்கும் நிர்பந்தம் வந்தால் அவரது திறமைகளை நாங்கள் பார்க்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு விடும்' என்று கூறியுள்ளார்.
மேலும் 'அறம்' திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பாக நயன்தாராவின் அழகு, ஒளிப்பதிவும், இசையும் அட்டகாசம் என்றும் நயன்தாரா சேலையில் அவ்வளவு அழகாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments