தனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’கர்ணன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை ரஷிஷா விஜயன் என்பவர் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இளம் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி என்பவர் இணைந்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ’முன்தினம் பார்த்தேனே’ என்ற படத்தில் அறிமுகமாகிய இவர் நயன்தாராவின் மாயா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்ணன் படத்தில் தான் இணைந்ததை லட்சுமி பிரியா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.