பாத்திரம் கழுவுவதும், டாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன்

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பதும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை லட்சுமிமேனன் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி, அந்த செய்திகள் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக தொடர்ந்து வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவுதல் மற்றும் மற்றவர்கள் பயன்படுத்திய டாய்லெட்டை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

அதேபோல் கேமரா முன் போலியாக சண்டை போடுவதும் தனக்குப் பிடிக்காத ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த லட்சுமிமேனன் கூறிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்திசிங் மொபைல் போன்கள் பறிமுதல்: பெரும் பரபரப்பு

திரையுலகில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியுமான

கடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது.

எஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பாக அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

God Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி!

பிரபல பாடகர் எஸ்பிபி நேற்று மறைந்த நிலையில் அவருடன் பழகிய சக பாடகர்கள், பாடகிகள் உள்பட பலரும் அவருடன் பழகிய மலரும் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது