பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் லட்சுமி மேனன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகி இருந்த நடிகை லட்சுமி மேனன் தற்போது மீண்டும் பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ’கும்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன். அதன் பின்னர் ’சுந்தரபாண்டியன்’ ’குட்டி புலி’ ’பாண்டிய நாடு’ ’’மஞ்சப்பை’ ’ஜிகர்தண்டா’ ’கொம்பன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அஜித் நடித்த ’வேதாளம்’ திரைப்படத்தில் லட்சுமி மேனனின் கேரக்டர் அனைவராலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிக அளவு நடிக்காத லட்சுமி மேனன் தற்போது மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். ‘ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் அடுத்த திரைப்படமான ’சப்தம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமன் இசையமைக்கும் இந்த படம் லட்சுமிமேனனுக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Welcome talented & lovely #LakshmiMenon in joining the sets of #Sabdham
— Arivazhagan (@dirarivazhagan) February 24, 2023
Starring @AadhiOfficial
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical
Produced by @7GFilmsSiva & @Aalpha_frames.@Dop_arunbathu @EditorSabu @Manojkennyk @stunnerSAM2 @Viveka_Lyrics @teamaimpr @decoffl pic.twitter.com/Ej9xlWlP9b
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com