மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கும் லட்சுமிமேனன்: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார் 

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதன்பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியன், விஜய்சேதுபதியின் ‘றெக்க’ என்ற உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் லட்சுமிமேனன் நடிக்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் லட்சுமிமேனன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தூள்ளது.

ஏற்கனவே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படத்திலும், சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்திலும் நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கௌதம் கார்த்திக்குடன் லட்சுமி மேனன் ஏற்கனவே ‘சிப்பாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், லட்சுமிமேனன் நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது